அமெரிக்காவின் புளொரிடா மாகாணத்தை உலுக்கிய மில்டன் புயல் காற்று காரணமாக உயிரிந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த புயல் காற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
புயல் காற்று காரணமாக சுமார் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட வீடுகள் நிறுவனங்களுக்கு மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.
புயல் காற்றினால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மில்டன் புயல் தாக்கத்தினால் புளொரிட மாகாணத்தின் சொத்துக்களுக்கு பாரியளவில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.