சுவிட்ர்லாந்தில் மீண்டும் போலியோ தொற்று ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
1990 களிலேயே போலியோ முற்று முழுதாக இல்லாது ஒழிக்கப்பட்டது.
இவ்வாறான ஓர் பின்னணியில் உலகில் போர் இடம்பெற்று வரும் நாடுகளில் இருந்து குடிப்பெயரும் குடியேறிகளின் ஊடாக போலியோ ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிஸ் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட அமைப்பு இது தொடர்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து குடியேறுவோர் போலியோ தடுப்பூசி ஏற்றிக் கொள்வது தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சில வேலைகளில் மீண்டும் போலியோ ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.
எட்டு வயதிற்கு குறைந்த பிள்ளைகளுக்கு போலியோ தடுப்பூசி கட்டாயமாக ஏற்றப்பட வேண்டும்.
எனினும் லூசார்ன் கான்டனில் 89 வீதம் அளவில் தடுப்பூசி ஏற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சுவிட்சர்லாந்தில் போலியோ ஏற்படக்கூடிய சாத்தியங்கள் மிகக் குறைவு என மத்திய சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.