அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சியின் வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ராம்பிற்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கமலா ஹரிஸ் தனது உடல் தகுதி குறித்த மருத்து அறிக்கையை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தமக்கு பூரண உடற் தகுதி காணப்படுவதாக ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவிதமாக டொனால்ட் ட்ராம்பும் தனது உடல் தகுதி குறித்த மருத்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென ஹாரிஸ் சவால் விடுத்துள்ளார்.
தனது உடல் நிலை தொடர்பான தகவல்களை வெளிப்படையாக அறிவிக்கக்கூடிய தைரியம் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கு கிடையாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கமலா ஹரிஸ் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ராம்பும் தனது மருத்து அறிக்கையை மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டுமென ஹரிஸின் பிரசார குழு கோரியுள்ளது.