கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக முக்கியமான குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை அரசாங்கம் துரிதப்படுத்தத் தீர்மானித்துள்ளது.
சில விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் அவை விரைவாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல், மத்திய வங்கி பிணை முறி வழக்கு, லலித் குகன் காணாமல் போன சம்பவம், ஊடகவியலாளர் தாகீ சிவராம் படுகொலை, துணைவேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரனாத் காணாமல் போன சம்பவம், தினேஷ் சாப்டர் மரணம் மற்றும் வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு ஆகிய சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட உள்ளன.
இந்த ஏழு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.