பிரபல வர்த்தகர் அர்ஜுன் அலோசியஸிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டபிள்யூ.எம் மெண்டிஸ் என்ற மதுபான நிறுவனத்தின் பணிப்பாளராக அர்ஜுன் அலோசியஸ் கடமையாற்றுகின்றார்.
அர்ஜுன் அலோசியஸ் மற்றும் இரண்டு பேருக்கு இவ்வாறு நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.
வெட் வரி மோசடியில் ஈடுபட்டதாக இந்த மூவருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தி கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த மூவரும் 3.5 பில்லியன் ரூபாய் வெட் வரியை ஏய்ப்பு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நீதிமன்றம் இவ்வாறு தண்டனை உள்ளது.
மத்திய வங்கி பிணைமுறை மோசடி விவகாரத்தில் அர்ஜுன் அலோசியஸ் ஓர் முக்கிய குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் இலங்கையில் பாரிய அளவில் பிணை முறி மோசடி இடம் பெற்றிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்செயல்களுடன் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அவரது மாமாவான அப்போதைய மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் ஆகியோர் தொடர்புபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.