ஆஸ்திரியாவில் பல்வேறு சந்தர்ப்பங்களில் குண்டு தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்த நபர் ஒரு சுவிட்சர்லாந்து பிரஜை என தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த நபர் சுவிட்சர்லாந்து பிரஜை என்பது தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரியாவில் பல்வேறு இடங்களில் குண்டு தாக்குதல் நடத்தப் போவதாக இந்த நபர் பல தடவைகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் இந்த அச்சுறுத்தல் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குறித்த கட்டிடங்களை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய பிடிவிறாந்து உத்தரவிற்கு அமைய குறித்த சுவிட்சர்லாந்து பிரஜையை ஆஸ்திரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
20 வயதான சுவிட்சர்லாந்து பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் சுமார் 27 தடவைகள் அநேமேதய, அடிப்படையில் மின்னஞ்சல் மூலம் குண்டு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.