இலங்கையில் அண்மைக்காலமாக அதிக அளவில் இணைய மோசடி சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு பிரஜைகள் இலங்கையில் வந்து தங்கி இருந்து பல்வேறு வழிகளில் இணைய மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வங்கி கணக்கு விவரங்களை களவாடி பண மோசடி இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இவ்வாறு இணைய வழியில் மோசடிகளில் ஈடுபட்ட பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு பிரஜைகளை கைது செய்யப்பட்டிருந்தனர்.
சீனப் பிரஜைகள் அண்மையில் சுமார் 126 சீன பிரஜைகளை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 13 வெளிநாட்டு பிரஜைகளும் அண்மையில் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இணைய வழியில் மோசடி செய்வதற்காக இலங்கையில் வீடுகளை வாடகைக்கு அமர்த்தி தங்கி இருந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களில் வெளிநாட்டு பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு, கண்டி, கம்பஹா போன்ற பகுதிகளில் இந்த மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்ற விசாரணை பிரிவினர் சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் அலைபேசிகளுக்கு வரும் OTP இலக்கங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.