சுவிட்சர்லாந்து அரசாங்கம், இரண்டு ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்தி உள்ளது.
இவர்கள் இருவருக்கும் தலா 500 சுவிஸ் பிராங்குகள் செலவுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக இவ்வாறு ஆப்கானிஸ்தானுக்கு இரண்டு பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால பகுதியில் ஆப்கான் பிரஜைகள் எவரும், அந்நாட்டுக்கு நாடு கடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரண்டு ஆப்கான் பிரஜைகளே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
துருக்கி விமான சேவை நிறுவனத்தின் விமானத்தின் ஊடாக குறித்த பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த தகவல்களை சுவிட்சர்லாந்து வெளிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இந்த இருவரும் பாரியளவு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுவிட்ச்லாந்தின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற அடிப்படையில் இந்த இரண்டு ஆப்கான் பிரஜைகளும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மேலும் 13 ஆப்கானிஸ்தான் பிரஜைகளுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் நாடு கடத்தப்படுவார்களா இல்லையா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.