இஸ்ரேலிய படையினர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கண்காணிப்பு படை முகாம் மீது தாக்குதல் நடத்துவதனை உடன் நிறுத்த வேண்டும் என கோரியுள்ளது.
லெபனானின் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கண்காணிப்பு படை முகாம்கள் காணப்படுகின்றன.
இந்த பகுதிகள் மீதான தாக்குதல்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு இது தொடர்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
லெபனானில் காணப்படும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு சொந்தமான கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது சர்வதேச சட்ட மீறல் என சுவிட்சர்லாந்து சுட்டிக்காட்டி உள்ளது.
அனைத்து தரப்பினரும் போர் நிறுத்தம் ஒன்றிற்கு செல்ல வேண்டுமென வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகாம்கள் மீதான தாக்குதல்கள் போர் குற்ற செயலாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.