குண்டு தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் எயார் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் புதுடெல்லியலிருந்து அமெரிக்காவின் சிக்காகோ நோக்கிப் பயணம் செய்த விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்க்பபட்டுள்ளது.
கனடாவின் ஈக்வாலைட் விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
AI127 என்ற விமானமே இவ்வாறு அவசரமாக கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
முன்எச்சரிக்கை பாதுகாப்பு அடிப்படையில் விமானம் தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய நாட்களாகவே இந்தியாவின் எயார் இந்தியா விமான சேவை நிறுவனத்திற்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானத்தில் சுமார் 211 பயணிகள் பயணித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலை நீடித்து வரும் நிலையில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.