வடகொரிய அரசாங்கம் தென் கொரியா உடனான பாதைகளை அழித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்தும் பாதைகள் இவ்வாறு தாக்கி தகர்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு நாடுகளையும் இணைக்கக்கூடிய பாதைகளில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறலாம் என தென்கொரியா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
வடகொரிய ராணுவம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்கொரிய எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள பாதைகளே இவ்வாறு தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை முழுமையாக துண்டிக்கப் போவதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்திருந்தது.
இவ்வாறான பின்னணியில் தற்பொழுது சில பாதைகள் தாக்கி அழிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.