புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் திங்கட்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.
ஈ-கடவுச்சீட்டு தொடர்பில் நீதிமன்றில் தடையுத்தரவு உள்ளதாகவும், அது தொடர்பில் விலைமனுக் கோரப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற விசாரணைகள் முடிவடைந்த பின்னர் அது தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆர்டர் செய்யப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வாகாது என்பதால், அக்டோபர் 11 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி, சாதாரண கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கும், விலைமனுக் கோரல் நடைமுறைக்கு ஏற்ப அதிக கடவுச்சீட்டுகளை இறக்குமதி செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.