இந்தியாவில், மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் சத்தீஸ்கரை சேர்ந்த பதின்ம வயதுடைய சிறுவனை மும்பை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
மும்பைக்கு செல்லும் சில விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகார்கள் வந்ததாக போலீசார் தெரிவித்தனர். சில சமூக ஊடகப் பதிவுகள் மூலம் இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
விசாரணையில் இந்த சமூக ஊடகப் பதிகளின் பின்னணியில் சத்தீஸ்கரை சேர்ந்த பதின்ம வயதுடைய சிறுவன் செயற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்வத்துடன் தொடர்புடைய சிறுவனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவன், சிறுவர் காபக்கமொன்றில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் சிறுவனுக்கும், அவனது நண்பனுக்கும் இடையே ஏற்பட்ட பணத் தகராறு காரணமாக, நண்பனின் புகைப்படத்தை வைத்து இந்த பதிவுகளை சிறுவன் சமூக ஊடகங்களில் இட்டுள்ளான்.
குறித்த சிறுவன் தனது நண்பரின் புகைப்படத்தை வைத்து சமூக வலைதளங்களில் மிரட்டல் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
அண்மையில், இந்தியாவில் விமானங்களின் மீது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பங்களுடன் இந்த சிறுவனுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று தினங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இந்திய விமானங்கள் பலவற்றிற்கு இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலைமை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
விமானங்கள் மீது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஏனையவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.