இலங்கையில் பாரிய அளவில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் பாரதூரமான குற்ற செயல்களில் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகள் நடத்துவது தொடர்பில் சில முக்கிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை கொண்டு தாக்குதல் மற்றும் தமிழ் இளைஞர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு இலங்கையில் அதிகம் பேசப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தேசிய மக்கள் சக்தி ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விதிக்கப்படும் என அறிவித்து வாக்குறுதிகளை வழங்கி இருந்தது.
இந்த வாக்குறுதிகளுக்கு அமைய கொழும்பு குற்ற விசாரணை பிரிவின் பணிப்பாளராக செயல்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட உயர் அதிகாரியான ஷானி அபேசேகர மீண்டும் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளார்.
ஷானி தலைமையிலான குழுவினர் பல்வேறு குற்ற செயல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
குறிப்பாக ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, படுகொலை சிவராம் படுகொலை காணாமல் போன்ற சம்பவம் போன்ற சம்பவங்கள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி ஏற்றுக் கொள்வதற்கு சில மணித்தியாலங்கள் முன்னதாக நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி நிஷாந்த டீ சில்வா மீள நாடு திரும்ப உள்ளதாக பாதுகாப்பு புலனாய்வு செய்தியாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இவர் இலங்கை போலீஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் பாடிய சில குற்றச்சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த தகவலை அரசாங்கத் தரப்புக்கள் உறுதி செய்யவில்லை.
கடந்த கால கொலை குற்ற செயல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் பக்க சார்பின்றி பூரணமாக சுயாதீனத்தன்மையுடன் விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார் நேற்றைய தினம் இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிட்டிருந்தார்.
லசந்த விக்ரமதுங்க, பிரதீப் எக்னலிகொட மற்றும் தாஜுதீன் ஆகியோரின் குற்ற விசாரணைகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், அவர்களைத் தவிர 7 முக்கிய குற்றவியல் வழக்குகள் துரித விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஏனைய கொலைகள் தொடர்பான விசாரணைகள் எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் கூறுகிறது.
தற்போது நடைபெற்று வரும் குற்ற விசாரணைகள் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“.. எந்தவொரு குற்றவியல் நடவடிக்கையையும் நாங்கள் விசாரிக்காது இருக்க மாட்டோம். அதனால்தான் சமீபத்திய சம்பவங்களான தாஜுதீன் கொலை, லசந்த விக்கிரமதுங்க கொலை, மற்றும் பிரகீத் எக்னெலிகொட கொலை என அனைத்தையும் நாங்கள் நிச்சயமாக விசாரிப்போம். பிரகீத் எக்னெலிகொட கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிக்கப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. மீண்டும் ஒரு விசாரணை தேவையில்லை. மேலதிக விசாரணைகள் தேவைப்படுமாயின் அதனை தொடரவும் முடியும். 7 முக்கிய குற்றவியல் வழக்குகள் துரித விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டு அவசரமாக முடிக்கப்பட வேண்டியுள்ளது. மற்றபடி 7 தான் என்று தவறாக எண்ண வேண்டாம். கடந்த காலங்களில் நடந்த அனைத்துப் பொருளாதாரக் குற்றங்கள், கொலைகள், ஊடகவியலாளர்கள் கடத்தல் போன்ற அனைத்துச் செயல்களுக்கும் சட்டம் அமுல்படுத்தப்படும் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.