-6.3 C
Switzerland
Saturday, February 8, 2025

மத்திய கிழக்கு வாழ் இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு விசேட அறிவிப்பு

Must Read

இஸ்ரேல், லெபனான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கையர்களுக்கு, நாட்டின் வெளிவிவகார விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் தற்போதைய மோதல்களின் தீவிரதன்மையானது, குறிப்பாக லெபனானில் ஒரு நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் கணிசமான எண்ணிக்கையிலான இலங்கையர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே அந்த நாடுகளில் காணப்படும் இலங்கை தூதரகங்கள் மூலம் எடுக்கப்பட்டு வருவதாகத்த தெரிவித்துள்ளது.

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அறிவுறுத்தல்களும் இலங்கை தூதரகங்களால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்கள் இந்த அறிவுறுத்தல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, அதற்கேற்ப செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் மற்றும் வசிப்பவர்களின் உறவினர்கள் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் அவர்களது உறவினர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவின் 011 – 2338812/ 011 – 7711194 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES