வெளிநாடுகளில் பொருள் கொள்வனவு செய்யும் சுவிட்சர்லாந்து பிரஜைகளுக்கு அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பிரஜைகள் எல்லைத் தாண்டி பொருட்களை கொள்வனவு செய்யும் போதான பெறுமதி சேர் வரி விதிப்பு உச்ச வரம்புத் தொகையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவர் வெளிநாடு ஒன்றிலிருந்து நாளொன்றுக்கு பொருள் கொள்வனவு செய்வதற்கான உச்சவரம்பு 300 சுவிஸ் பிராங்குகளாகும்.
அதாவது 300 பிராங்குகள் வரையில் பெறுமதி சேர் வரி அறவீடு செய்யப்படாது.
இவ்வாறு வெளிநாட்டிலிருந்து பொருள் கொள்வனவு செய்வது பொருள் இறக்குமதியாக கருதப்படுகின்றது.
இதன்படி தற்பொழுது ஒருவர் 300 சுவிஸ் பிராங்குகள் வரையில் நாளொன்றுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.
எனினும் 2025 ஆம் ஆண்டு முதல் இந்த உச்சவரம்புத் தொகை அரைவாசியாக குறைக்கப்படுகிறது.
இதன்படி அடுத்த ஆண்டு முதல் 150 சுவிஸ் பிராங்குகளுக்கு மேல் நாளொன்றுக்கு வெளிநாட்டில் இருந்து பொருள் கொள்வனவு செய்தால் அந்த தொகைக்கு ஏற்றவாறு பெறுமதி சேர் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் சுவிட்சர்லாந்தை அண்டிய பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வது வழமையானதாகும்.