2.2 C
Switzerland
Wednesday, November 13, 2024

அனுபவமற்றவர்களை பொதுத் தேர்தலில் தெரிவு செய்ய வேண்டாம் – ரணில்

Must Read

அனுபவமற்றவர்களை பொதுத் தேர்தலின் போது தெரிவு செய்ய வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

நாடு தொடர்ந்து சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் பொருளாதார நெருக்கடிகளை நிர்வகிப்பதில் அனுபவமுள்ள பாராளுமன்ற வேட்பாளர்களை தெரிவு செய்யுமாறு கோரியுள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு வருடங்களாக தன்னுடன் இணைந்து செயற்பட்டவர்கள் நாட்டை முன்னேற்றுவதற்கு மிகவும் பொருத்தமானவர்கள் என வலியுறுத்தினார்.

பொருளாதார நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதைத் தெரிந்த தலைவர்கள் பாராளுமன்றத்தில் இருப்பது இன்றியமையாதது. நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவராக இருந்தாலும் சரி, இந்த அனுபவம் இல்லாமல், நாட்டின் இலக்குகளை அடையத் தவறிவிடுவீர்கள்.

அனுபவம் வாய்ந்த எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு அனுபவமுள்ளவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என கடந்த தேர்தலில் வாக்களிக்காதவர்களிடம் விக்கிரமசிங்க விசேட வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டின் எதிர்காலம் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தேசத்தின் மீட்சியை உறுதி செய்வதற்கும் சரியான திறன்களைக் கொண்ட தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் தங்கியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), மற்றும் ஏனைய அரசியல் குழுக்களின் பிரதிநிதிகளின் பரந்த ஆதரவுடன் ‘காஸ் சிலிண்டர்’ சின்னத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தனது தலைமைத்துவத்தை முன்னிலைப்படுத்திய இந்த கூட்டணி தொடர்ந்தும் வலுவாக இருக்கும்.

“என்னுடன் பணியாற்றிய எம்.பி.க்கள் மற்றும் ஐ.தே.க நிர்வாகிகளில் ஒரு பகுதியினர் இப்போது ‘புதிய ஜனநாயக முன்னணி’யின் கீழ் இந்தத் தேர்தலில் இணைந்து கொண்டுள்ளனர். அவர்களின் அனுபவம் மற்றும் அர்ப்பணிப்புடன், இந்த புதிய பாராளுமன்ற பதவிக்காலத்தின் வெற்றியை உறுதி செய்வார்கள்” என அவர் மேலும் கூறினார்.

இந்த முக்கியமான காலக்கட்டத்தில் தேசத்தை வழிநடத்தும் நிபுணத்துவம் கொண்ட வேட்பாளர்களுக்கு தமது பெறுமதியான வாக்களிக்குமாறு குடிமக்களை வலியுறுத்தியுள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES