இஸ்ரேலுக்கு அதி சக்திவாய்ந்த ஆயுதங்களை அனுப்பி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பாதுகாப்புச் செயலாளர் யோவ் காலண்டுடன் இந்த ஆயுதம் தொடர்பில் லொயிட் கலந்துரையாடியுள்ளார்.
அதி நவீன வான் பாதுகாப்பு கட்டமைப்பினைக் கொண்ட ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களை வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பானது எதிரிகளின் ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கக்கூடிய வல்லமை கொண்டவை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புதிய ஆயுத விநியோகம் இஸ்ரேலின் இரும்புக்கவச பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பினை பிரதிபலிப்பதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
THAAD என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை எதிர்ப்பு ஆயுதமானது அமெரிக்க இராணுவத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆயுதம் 150 முதல் 200 கிலோ மீற்றர் தொலைவில் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவை என தெரிவிக்கப்படுகின்றது.
லெபனானின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக இந்த ஆயுதங்கள் வழங்கப்புடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வளிமண்டலத்தின் உள்ளே அல்லது வெளியே ஏவுகணைகளை வழிமறித்து தாக்கி அழிக்கக்கூடிய அதி நவீன ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இதேவேளை, காசாவின் மனிதாபிமான நிலைமைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா, இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.