உலகின் பிரபல இசைக்கலைஞர்களில் ஒருவரான லியாம் பெய்ன் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
31 வயதான பெய்ன், ஒன் டிரெக்சன் என்ற பிரபல இசைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் என்பது குறிப்பிடத்கத்கது.
ஆர்ஜன்டீனாவின் பொய்னோஸ் அய்ரிஸில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
ஹோட்டலின் பால்கனியிலிருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பெய்னின் மரணம் இசை உலகை அதிர்ச்சிக:கு உள்ளாக்கியுள்ளதுடன், பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.