-0.6 C
Switzerland
Sunday, February 16, 2025

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் விற்பனை செய்யப்படாது

Must Read

கடனில் சிக்கியுள்ள தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை இலங்கையின் புதிய அரசாங்கம் விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டுள்ளது.

எனினும், அதிக இலாபகரமான நிறுவனமாக அதனை மறுசீரமைக்கும் திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

“எல்லா இலங்கையர்களும் பெருமைப்படும் ஒரு நிறுவனமாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இருக்க வேண்டும் என்றும் அது இலங்கையர்களுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

விமான சேவை நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொடவிற்கு இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நீண்ட காலமாக நட்த்தில் இயங்கி வரும் விமான நிறுவனத்தை பகுதி அளவில் விற்பனை செய்தல் அல்லது நிர்வகிப்பதற்கான ஏலங்களை கடந்த அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான காலக்கட்டத்தில் விமான நிறுவனம் செயல்பாட்டு லாபத்தைப் பதிவு செய்திருந்தாலும், அதன் திரட்டப்பட்ட கடன் 1.2 பில்லியன்அமெரிக்க டொலர்களாகும்.

முந்தைய திட்டத்தின் கீழ் அரசாங்கம் விமானத்தின் 51 சதவீத கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் மீதமுள்ள 49 சதவீதத்தை முதலீட்டாளர்களுக்கு விற்க வேண்டும் என தீர்மானித்திருந்தது.

விமான நிறுவனத்தை நடத்துவதில் அனுபவம் இல்லாத சிலர் உள்ளிட்ட ஆறு தரப்பினர் கொள்வனவு செய்ய ஆர்வம் காட்டினர்.

எனினும், செயல்முறையின் அடுத்த கட்டத்திற்கு யாரும் முன் தகுதி பெறவில்லை.

கடந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டு வந்த அரச சொத்துக்களை விற்பனை செய்வதை நிறுத்துவதாக அனுரகுமார உறுதியளித்திருந்தார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உட்பட நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை விற்பனை செய்யும் அரசாங்கப் பிரிவை திஸாநாயக்க விரைவாக அகற்றினார்.

இதேவேளை, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அரசாங்கத்திற்கு சொந்தமானதாக இருக்க வேண்டியது அவசியம் என விமான சேவை நிறுவனத்தின் தலைவர் கனேகொட தெரிவித்துள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES