ரஷ்யாவை போரில் வெற்றி கொள்ளக் கூடிய வியூகம் ஒன்றை உக்கிரேன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலென்ஸ்கீ சமர்ப்பித்துள்ளார்.
ஐரோப்பிய தலைவர்களிடம் இந்த வெற்றிக்கான வியூகத்தை அவர் சமர்ப்பித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் இந்த உக்ரேனுக்கு பூரண ஆதரவளிப்பதாக உறுதி அளித்துள்ளது.
எவ்வாறு எனினும் உக்ரைனின் சில கோரிக்கைகளை அனுமதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
உக்ரைன் ஜனாதிபதி தனது திட்டத்தை ஒரு மணித்தியாலமாக தெளிவுபடுத்தியுள்ளார்.
உக்ரேனின் கோரிக்கைகளுக்கு திடமான உறுதிமொழிகள் எதனையும் வழங்கவில்லை.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மாநாடு நடைபெற்று வரும் அதேவேளை, நெட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தொடர் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகின்றது.
உக்ரைனை நேட்டோ உறுப்பினராக ஏற்றுக்கொள்ள லிட்வெனியா இணககம் தெரிவித்துள்ளது.
எனினும் அமெரிக்கா இந்த விடயத்தில் தயக்கம் காட்டி வருகின்றது.
அணு வளத்தை கொண்ட ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவது குறித்து அமெரிக்கா தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.
நீண்ட தூரம் பயன்படுத்தக்கூடிய ஏவுகணைகளை வழங்குமாறு உக்ரைனின் ஜனாதிபதி கோரியுள்ளார்.
இந்த ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவின் இலக்குகளை உக்ரைனினால் தாக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போரை ரஷ்யாவிற்குள் கொண்டு செல்ல வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கி உள்ளன.
இந்த ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா மீது தாக்குதல் நடத்த முடியும் உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு ரஷ்யா ஜெர்மனி இணங்கவில்லை.
இது தொடர்பில் ஏற்கனவே எடுத்த முடிவுகளையே மீண்டும் எடுக்க வேண்டி இருப்பதாக ஜெர்மன் அதிபர் தெரிவித்துள்ளார்.
தமது வெற்றி கூட்டு நாடுகளின் ஒத்துழைப்பில் தங்கி உள்ளது என உக்ரேனிய ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
உக்ரைனின் வெற்றி வியூகமானது ரஷ்யாவின் கைகளில் கிடையாது எனவும் நேச நாடுகளின் ஒத்துழைப்பில் தங்கி இருக்கின்றது எனவும் ஜனாதிபதி செலென்ஸ்கீ தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி வியூகத்தை தற்பொழுது ஆரம்பித்து நடைமுறைப்படுத்தினால் அடுத்த வருடத்திற்குள் இந்த போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என ஜனாதிபதி செலென்ஸ்கீ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி ரஷ்ய படையினரை வெற்றி கொள்வதற்கு முன் வைத்துள்ள மூலோபாயங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் பூரண இணக்கப்பாடு வெட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அநேக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளித்த போதிலும் ரஷ்யாவுடன் நேரடி போரை தவிர்த்துக் கொள்வதில் கரிசனை காட்டி வருகின்றமை கவனிக்கப்பட வேண்டியது.
ஜெர்மன் போன்ற நாடுகள் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை வகைகளை உக்ரைனுக்கு வழங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
அமெரிக்கா ஒருபுறத்தில் உக்ரைனுக்கு உதவிகளை வழங்கிய போதிலும் உக்ரனின் சில நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது.