சுவிட்சர்லாந்து அரசாங்கம் ரஷ்யா மீதான தடைகளை விஸ்தரிப்பதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான போர் காரணமாக இவ்வாறு சுவிட்சர்லாந்து ரஷ்யா மீதான தடைகளை விஸ்தரித்துள்ளது.
ரஷ்யாவின் அரசியல் கட்சிகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடகங்கள் போன்றன ரஷ்ய அரசாங்கத்திடமிருந்து நன்கொடைகளை பெற்றுக் கொள்ளக் கூடாது என சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
உள்நாட்டில் இயங்கி வரும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஊடக நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜனநாயக பொறிமுறைமையில் ரஷ்யாவின் தலையீட்டை வரையறுக்கும் நோக்கில் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு எனினும் கருத்து சுதந்திரம் முடக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரஷ்யா மீது பல்வேறு தடைகளை சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் புதிய தடைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.