உலக அரங்கில் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பின்னடைவை சந்திக்க நேரிட்டுள்ளது.
விமான சேவை நிறுவனத்தின் சர்வதேச ரீதியிலான பாதுகாப்பு தரப்படுத்தல் பட்டியலில் குறைந்த தரத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-607 இல் விமானிகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் அண்மைய சம்பவமானது.
அதன் பாதுகாப்பு மதிப்பீடுகளை ஏர்லைன் தரப்படுத்தல் மூலம் தரமிறக்க வழிவகுத்தது.
அண்மையில் சிட்னியில் இருந்து கொழும்புக்கு 10 மணி நேர விமானப் பயணத்தின் போது தனது பெண் துணை விமானியை விமானத் தளத்திலிருந்து வெளியே பூட்டியதாகக் கூறப்படும் அதன் பிரதம விமானி ஒருவர் செயற்பாடு காரணமாக இந்த மதிப்பீட்டு இறக்கம் மேற்கொள்ளப்பட்டுளள்து.
இதன்படி, இலங்கையின் பாதுகாப்பு மதிப்பீட்டை ஏழு நட்சத்திரங்களிலிருந்து, ஆறு நட்சத்திரங்களாகக் குறைத்துள்ளது.
இந்த சம்பவம் ஸ்ரீலங்கன் ஏர்பஸ் A330-300 இல் இடம்பெற்றுள்ளது.
விமானத்தின் துணை விமானியாக பணியாற்றிய பெண் அதிகாரி கழிப்பறைக்கு செல்ல இடைவேளை எடுத்துக்கொண்டு விமான தளத்திலிருந்து (காக்பிட்) வெளியேறியதன் பின்னர், பிரதான விமானி குறித்த துணை விமானியை மீண்டும் காப்பிட்டிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், விமானம் கொழும்பில் பாதுகாப்பான தரையிறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்தது, பிரதான விமானிக்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே கதவடைப்புக்குக் காரணம் என்று துணை விமானி முறைப்பாடு செய்துள்ளார்.
இலங்கையின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், விமானியை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பிரதான கெபின் க்றீவ் அதிகாரி தலையீடு செய்து விமானியுடன் தொடர்பாடல் செய்து துணை விமானியை மீண்டும் காக்பிட்டிற்கு அனுமதித்துள்ளதாக மற்றுமொரு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த சம்பவத்தினால் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பாதுகாப்பு தரநிலை குறைக்கப்பட்டுள்ளது.
விமான சேவை நிறுவனங்களின் தரப்படுத்தல்களை மேற்கொள்ளும் சர்வதேச நிறுவனமான AirlineRatings.com நிறுவனம் இந்த சம்பவத்தை பாரதூரமான சம்பவம் என சுட்டிக்காட்டியுள்ளது.