வெடிகுண்டு பீதி காரணமாக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மும்பையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்த விமானம் ஒன்று இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விஸ்தாரா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான யுகே 131 விமானத்தில் இவ்வாறு குண்டு பீதி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று இலங்கை நேரம் பிற்பகல் 2:51 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த விமானம் அனாமேதய வெடிகுண்டு அச்சுறுத்தல் அழைப்பு காரணமாக 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே வதரையிறக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு குறித்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 96 பயணிகளும் 8 விமான பணியாளர்களும் பயணித்துள்ளனர்.
விமானத்தில் பயணித்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கி இவ்வாறு அவசரமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கி, விமானத்தின் பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.