இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதல்களில் காசாவில் 73 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் பெண்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு காசாவின் பெயிட் லஹியா என்னும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தாக்குதல்கள் காரணமாக கட்டிடங்களுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஹமாஸ் போராளிகள் மிகைப்படுத்திய உயிர் சேத விபரங்களை வெளியிட்டு வருவதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.
மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த வான் தாக்குதல்களினால் மக்கள் குடியிருப்புக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகளே இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இஸ்ரேல் படையினர தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களை இலக்கு வைத்து மோசமான தாக்குதல்களை நடத்தி வருவதாக ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.