நாட்டில் அமுல்படுத்தப்படும் ஏதிலி கொள்கையை சரியானது என சுவிட்சர்லாந்தின் நீதி அமைச்சர் பீட் ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஏதிலி கொள்கை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறெனினும், நாட்டின் ஏதிலி கொள்கை சரியானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது சுவிட்சர்லாந்தின் ஏதிலி கொள்கை சரியான திசையில் முன்னெடுக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஏதிலி கோரிக்கை விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாகவும் குறைந்த அளவு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் காணப்படுவதாகவும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடு கடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிதாக 24 மணித்தியாலத்திற்குள் ஏதிலி கோரிக்கை விண்ணப்பங்கள் ஆய்வு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக சுற்றுலாந்தில் ஏதிலி அந்தஸ்து கூறுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.