இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்களுக்கு எதிராக 90 க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன .
இந்த ஒரு வார காலப் பகுதியல் இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது பயணிகளிடையே அச்சத்தையும் உலகளாவிய ரீதியில் விமானப் பயணங்களில் தாமதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன.
எனினும் வெடி குண்டு அச்சுறுத்தல்களின் காரணமாக விமானங்கள் கனடா மற்றும் ஜெர்மனிக்கு திருப்பி விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சில விமானங்களுக்கு பிரிட்டன் மற்றும் சிங்கப்பூர் போர் விமானங்கள் வான் வழியாக பின்தொடர்ந்திருந்தன.
இவ்வாறான போலி அச்சுறுத்தல்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை” எடுக்கப்படும் என்று இந்திய அரசும், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று மட்டும் குறைந்தது 30 குண்டுப் புரளிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பதின்ம வயதான சிறுவன் ஒருவனை பொலிஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.