இலங்கையில் புதிய தோற்றத்தில் கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் புதிய கடவுச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக இலங்கையின் கடவுச்சீட்டு சிகப்பு நிறத்தைக் கொண்ட அட்டைகளைக் கொண்டிருக்கும்.
எனினும் இம்முறை கடும் நீல நிறத்தில் புதிய கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுவரையில் கடவுச்சீட்டு எண்கள் என் என்ற ஆங்கில எழுத்துடன் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தற்பொழுது பீ என்ற ஆங்கில எழுத்து பயன்படுத்தப்படுகின்றது.
நல்லூர் கோயில், தலதா மாளிகை, சிகிரியா, காலி கோட்டை, பொலனறுவையின் முக்கிய இடங்கள், தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பிரதிபலிக்கும் கட்சிகள் கடவுச்சீட்டு பக்கங்களில் அச்சிடப்பட்டுள்ளன.