கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவருக்கு தகவல் தெரிந்திருந்தது என குற்றம் சம்பந்தப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன இந்த தகவல்களை தெரிந்து வைத்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில இந்த தகவல்களை சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் .
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் மிக ரகசியமான அறிக்கையொன்று புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பாக அப்போது செயற்பட்ட பிரதிப் பொலஸ் மா அதிபர் ரவி செனவிரட்னவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கையில் இந்த விடயம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
இந்த அறிக்கையை கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி ரவி சென்டிமிரத்னவின் அனுப்பி வைக்கப்பட்டபோதிலும் அவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி 16ஆம் திகதி இதனை பார்வையிட்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சஹ்ரான் உள்ளிட்டவர்கள் தொடர்பிலான பூரண விபரங்கள் உள்ளடங்கிய 40 பக்கங்களைக் கொண்ட அறிக்கை இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த ஆவணத்தை வாசித்து உரிய நடவடிக்கை எடுக்க தாவறியுள்ளதாக உதய கம்மன்பில இவ்வாறான ஒருவருக்கே அரசாங்கம் பொலிஸ் திணைக்களத்தை பொறுப்பாக ஒப்படைத்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஏற்கனவே இந்த குற்றச்செயலை மூடி மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் ரவி செனவிரட்ன பொலிஸ் பிரிவிற்கு தலைமை தாங்கினால் எவ்வாறு விசாரணைகளை சுயாதீனமான முறையில் நடக்க முடியும் என உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓய்வுபெற்ற நீதவான் எஸ்.ஐ. இமாம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையின் வெளியிடப்படாத விபரங்களை உதய கம்மன்பில வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட 25 விடயங்கள் தொடர்பில் இந்த தகவல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.