நியூசிலாந்தின் டுனெடின் விமான நிலையத்தில் பயணிகள் கட்டிப்பிடித்துக் கொள்வதற்கு வரையறை விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் செல்லும் போது உறவினர்கள் கட்டிப்பிடித்து வழி அனுப்புவது வழமையானதாகும்.
எனினும் பயணிகள் தங்கள் உறவினர்களை அல்லது நண்பர்களை கட்டிப்பிடித்து பிரியா விடை கொடுப்பது தொடர்பில் விமான நிலைய நிர்வாகம் சில வரையறைகளை அறிவித்துள்ளது.
இதன்படி நியூசிலாந்தின் விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் வாகன தரப்பினத்தில் பிரியாவிடை கொடுக்க வேண்டும் எனவும் மூன்று நிமிடங்கள் வரையில் மட்டுமே கட்டிப்பிடித்துக் கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் விமான நிலையத்தின் இந்த தீர்மானம் தொடர்பில் பயணிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
நீண்ட நேரம் உணர்வுபூர்வமாக உரையாடுவது சில வேலைகளில் விமான பயண நேரத்தை பாதிக்கலாம் என விமான நிலையம் பதிலளித்துள்ளது.