முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் பயன்படுத்திய வாகனங்களில் சிலவற்றை அரசாங்கத்திடம் மீள ஒப்படைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களில் மூன்று வாகனங்களை இவ்வாறு இன்றைய தினம் ஒப்படைத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இவ்வாறு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களில் நோயாளர் காவு வண்டி, வேன் மற்றும் கெப் வண்டி என்பன உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கூடுதல் சலுகை வழங்கப்படுவதாக தற்போதைய அரசாங்கம் விமர்சனங்களை வெளியிட்டு வரும் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவ்வாறு வாகனங்களையும் மீள ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.