சுவிட்சர்லாந்தில் மருந்து வகைகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஆணைக்குழுக்களினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மிக அதிக வருவாயை ஈட்டும் மருந்து வகைகளுக்கு, கொள்வனவு அளவின் அடிப்படையில் தள்ளுபடி வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கமும் கான்டன் அரசாங்கங்களும் பொது சுகாதார ஆணையங்களிடம் வலியுறுத்துகின்றன.
இந்த நடவடிக்கை பல பிரபலமானதும் விலை கூடியதுமான மருந்துகளை சுகாதார காப்பீடு வழங்குநர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய வழியமைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலகுவாக மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.