சுவிட்சர்லாந்து அரசாங்கம் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட ஓய்வூதியங்களின் வரி நன்மைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த தீர்மானம் பலரது வரிகளை கணிசமாக அதிகரிக்கும்.
ஒரு புதிய கணக்கீட்டு முறையானது வருமானத்தின் அடிப்படையில் வரிச்சுமையை நிர்ணயிக் உள்ளது.
எனவே முதன்மையாக நடுத்தர வர்க்கம் மற்றும் அதிக வருமானம் ஈட்டுபவர்களே இந்த வரி கொள்கையினால் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், குறைந்த வருமானம் பெறுபவர்கள் இந்த மாற்றத்தால் பயனடைவார்கள்.
திட்டமிடப்பட்ட நடவடிக்கையானது, அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 250 மில்லியன் பிராங்குகள் கூடுதல் வருமானத்தை ஈட்ட வழியமைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.