சுவிஸ் விமான சேவை இஸ்ரேலுக்கான விமான பயணங்களை தொடர்ந்தும் இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் பதற்ற நிலைமை காரணமாக இவ்வாறு விமான பயணங்களை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கான மற்றும் இஸ்ரேலில் இருந்தான பயணங்கள் இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை நிறுவனத்தின் தாய் நிறுவனமான லுப்தான்சா நிறுவனம் இந்த விமான பயணங்களை இடைநிறுத்தும்ம் நடவடிக்கையை பிராந்தியம் முழுவதும் முன்னெடுத்து உள்ளது.
லுப்தான்சா, சுவிஸ், ஒஸ்ட்ரியா உள்ளிட்ட பல விமான சேவை நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான விமான பயணங்களை ரத்து செய்துள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி வரையில் இந்த விமான பயண இடைநிறுத்தம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான பயணங்கள் இடைநிறுத்தப்பட்ட காரணத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகள் மீள பயணங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.