சுவிட்சர்லாந்து மக்களிடம் சுமார் இருநூறு தென் எடையுடைய தங்கம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து பிரஜைகள் தனிப்பட்ட ரீதியில் இவ்வாறு பாரியளவு தங்கத்தை தம்வசம் வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தங்கத்தின் சந்தைப் பெறுமதி சுமார் 15 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தங்கம் வைத்திருப்பவர்கள் மொத்த தங்க கையிருப்பில் 20 வீதத்தை வீடுகளில் பாதுகாப்பாக பேணி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் சென் கேலன் பல்கலைக்கழகம் இந்த விடயம் தொடர்பிலான ஆய்வினை முன்னெடுத்துள்ளது.
ஆய்வின் அடிப்படையில் தங்கம் வைத்திருப்பவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.