சூரிச் விமான நிலையம் எதிர்வரும் குளிர்காலத்தில் விமான பயணங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த குளிர்காலத்தில் புதிய இடங்களுக்கான பயணங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை இணைக்கும் வகையில் புதிய விமான சேவைகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் இது தொடர்பிலான ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
53 விமான சேவை நிறுவனங்களின் ஊடாக சுமார் 169 இடங்களுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் விமான பயணங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
எகிப்தின் கீசா மற்றும் ஓமானின் சாலா ஆகிய நகரங்களுக்கும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
சுவிஸ் விமான சேவை நிறுவனமும் பல்வேறு புதிய இடங்களுக்கான சேவைகளை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.