இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூவின் இல்லம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களுக்கு லெபனானில் நிலை கொண்டுள்ள ஹிஸ்புல்லாஹ் இயக்கம் உரிமை கோரியுள்ளது.
வடக்கு இஸ்ரேலின் செசரியா என்னும் பகுதியில் அமைந்துள்ள நெட்டன்யாகூவின் இல்லத்தின் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் ஊடக அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் நடத்தப்பட்ட போது பிரதமர் வீட்டில் இருக்கவில்லை எனவும் வேறும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.