இலங்கையில் வாழ்ந்து வரும் ரஷ்ய பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அறுகம்பே பிரதேசத்தின் பிரபல சுற்றுலா பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இலங்கை பொலிஸாரின் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் தனது நாட்டு பிரதிகளுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
ரஷ்ய பிரஜைகள் அதிகமாக ஒன்று திரள வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அறுகம்பே கடற்பகுதிக்கு செல்வது தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவும் தனது பயண எச்சரிக்கையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரஸ்யா மற்றும் பிரித்தானியாவும் அறுகம்பே தொடர்பில் பயண எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.