இலங்கையில் சுற்றுலா தளங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அறுகம்பே கடற்கரை பிரதேசத்தில் இந்த தாக்குதல் அச்சுறுத்தல் நிலவி வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் சுற்றுலா தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் இது தொடர்பில் நம்பத் தகுந்த தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
எனவே அமெரிக்க பிரதேசங்கள் குறித்த பகுதிக்கான பயணங்களை வரையறுத்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான ஏதும் விடயங்கள் இருந்தால் அது குறித்து பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் உள்ளுர் செய்தி சேவைகளில் வெளியாகும் செய்திகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தீவிரவாத தாக்குதலா அல்லது வேறும் தாக்குதல்களா என்பது குறித்து அமெரிக்கத் தூதரகம் தெளிவாக குறிப்பிடவில்லை.