கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று பிற்பகல் பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் மும்பை நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணம் செய்த விமானம் ஒன்றில் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
விஸ்தாரா விமான சேவைக்கு சொந்தமான இந்த விமானத்தில் குண்டு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
யுகே 131 என்ற இலக்க விமானமே இவ்வாறு அவசரமாக இன்று பிற்பகல் தரையிறக்கப்பட்டுள்ளது.
சுமார் 108 பயணிகளுடன் இந்த விமானம் பறந்துள்ளது நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
இதன்போது விமான நிலையத்தில் நோயாளர் காவு, வண்டிகள் தீயணைப்பு படை வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு அவசர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அண்மைக்காலமாக விமானங்கள் தொடர்பில் பல்வேறு குண்டு அச்சுறுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.