சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அல்ஜீரியாவில் கொல்லப்பட்டுள்ளார்.
அல்ஜீரியாவின் டிஜெநெட் நகரில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சில சுற்றுலாப் பயணிகளுடன் இந்த பெண் அல்ஜீரியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.
இதன் போது நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் இந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இலக்கான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.