சுவிட்சர்லாந்தில் போலி விவாகரத்துக்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஓய்வூதியக் கொடுப்பனவு பெற்றுக் கொள்ளும் நோக்கில் வயோதிப தம்பதியினர் இவ்வாறு போலியாக விவாகரத்து செய்து கொள்கின்றனர்.
திருமணமாகா அல்லது தனித்து வாழ்வோருக்கு மாதாந்தம் கூடுதல் தொகை ஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்கப்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வரி அறவீடு செய்யப்படும் போதும் தனித் தனியாக வரி கோப்புக்களை சமர்ப்பிக்கும் போது கூடுதல் நலன்கள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தற்பொழுது ஒன்றாக வாழ்ந்தாலும் சட்ட ரீதியாக விவாகரத்து பெற்றுக்கொள்ள முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.