அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
1990களில் முன்னாள் விளையாட்டு மாடல் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்டாசி வில்லியம்ஸ் என்ற முன்னாள் மாடல் அழகியே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
தகாத முறையில் டிரம்ப் தம்மை தீண்டியதாகவும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் வில்லியம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் காணொளி ஒன்றில் தகவல் வெளியிட்டுள்ளார்.
1993 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் இன் அலுவலகத்திற்கு சென்றபோது அவர் இவ்வாறு துன்புறுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமது வாழ்க்கையில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களில் ஒன்று என அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.