இலங்கையின் விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனங்கள் ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளன.
கடந்த 19 ஆம் மற்றும் 23ஆம் திசதிகளில் இந்தியாவின் விஸ்தாரா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குண்டுப்பீதி காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவங்களின் அடிப்படையில் விமான நிலையத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் மட்டும் இந்தியாவில் விமானங்களில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக 80 போலி அறிவித்தல்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.