ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாக இஸ்ரேல் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஈரானின் ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் மற்றும் வான் பாதுகாப்பு கட்டமைப்பு என்பன மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் உற்பத்தி செய்யப்பட்ட ஈரானின் உற்பத்தி நிலையங்களை தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதன் ஊடாக ஈரானின் இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்த வழியமைக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரானின் பல்வேறு இராணுவ நிலைகள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தாக்குதல்களினால் ஏற்பட்ட சேதங்கள் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலானது என ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேல் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் அவதானமாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரான், இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டுமென அமெரிக்கா கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் இந்த க் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.