அறுகம்பே பகுதியில் இஸ்ரேலிய படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்காக பெருந்தொகை பணம் வழங்கப்பட்டுள்ளதாக விசரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
யூத இன சமூகங்களைச் சேர்ந்தவர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களுக்கு இந்த தாக்குதலுக்காக இரண்டு லட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்கள் என்ற அடிப்படையில் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் முஸ்லிம் மற்றும் தமிழ் பிரஜைகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.