காசா பிராந்தியத்தில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல்களில் சுமார் 180 ஊடகவியலாளாகள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்ரோபர் மாதம் முதல் இதுவரையில் சுமார் 180 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் இடம்பெற்ற தாக்குதல்களில் மூன்று பலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர்கள் மரணங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் தலையீடு செய்ய வேண்டுமென பலஸ்தீன அரசாங்கம் கோரியுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் இஸ்ரேலிய படையினரின் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.