அரசாங்கம் பெருந்தொகை பணத்தை அச்சிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அரசாங்கம் ஏல விற்பனைகளின் மூலம் சுமார் 100 பில்லியன் ரூபா பணத்தை அச்சிடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒருநாள் ஏல விற்பனை மற்றும் கால அடிப்படையிலான ஏல விற்பனையின் மூலம் அரசாங்கம் பெருந்தொகை பணத்தை அச்சிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சுமார் 100 பில்லியன் ரூபா வரையில் பணம் அச்சிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்திலும் இவ்வாறு கூடுதல் அளவில் பணம் அச்சிடப்பட்டதாகவும் இது பாரிய பொருளாதார சிக்கல்களை உருவாக்க வழியமைக்கும் என ரோஹினி கவிரட்ன தெரிவித்துள்ளார்.