இலங்கை மீது பயண தடை விதிக்கப்படவில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக பயண தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அறுகம்பை பகுதியில் பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் பயண அறிவுறுத்தல் வழங்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அமெரிக்க பிரஜைகள் இலங்கைக்கு பயணம் செய்வதை தடை செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் தொடர்ச்சியாக இணைந்து செயல்பட விரும்புவதாகவும் இலங்கை மக்களின் சுபீட்சத்திற்காக அமெரிக்கா தொடர்ந்தோம் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில் இந்த பயண அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இது பயண தடை கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
நாள்தோறும் நாட்டின் பாதுகாப்பு நிலமைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு அடுத்த கட்ட அறிவிப்புகள் மேற்கொள்ளப்படும் என ஜூலி ச்சேங் தெரிவித்துள்ளார்.