இஸ்ரேல் அத்துமீறி தமது வான்பரப்பில் பிரவேசித்ததாக ஈராக் குற்றம் சுமத்தியுள்ளது.
இஸ்ரேலிய படையினர் சட்டவிரோதமான முறையில் தமது வான்பரப்பில் அத்துமீறி பிரவேசித்ததாக ஈராக் குற்றம் சுமத்தியுள்ளது.
குறிப்பாக அண்மையில் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களின் போது இவ்வாறு தமது வான்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஈராக்கிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
இஸ்ரேலிய படையினர் அத்துமீறி தமது வான்பரப்பிற்குள் பிரவேசித்ததாகவும் இது தமது பௌதீக ஒருமைப்பாடு மற்றுமு; இறையாண்மையை மீறும் வகையிலான செயல் எனவும் ஈராக் தெரிவித்துள்ளது.
வேறும் நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈராக்கிய வான் அல்லது நிலப்பரப்புகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என ஈராக் தெரிவித்துள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் ஈராக்கிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.